தேவதையே நீ யார்
வண்ணச் சிறகு பெற்று
வானவில் ஒன்று
என் வாசல் கடந்ததோ ?
முள் உதிர்த்து
ஒரு சிவந்த ரோஜா
மறு உருக் கொண்டு
என் வீதி நடந்ததோ ?
மல்லிகைப் பந்தல் ஒன்று
மாலைத் தேரென
பவனி வந்ததோ ?
சிந்தனை துறவு பூண்டு நிற்கும்
இந்த அந்தி மாலையில்
காதல் கவிதை தர வந்த
தேவதையே நீ யார் ?
----கவின் சாரலன்