ஏனடி இந்நிலை
நிழலை மட்டும் தனியாய் கொண்டு
நானாய் பேசி அலைதல் ஏன்டி
ஆழிஅலை சத்தம் தன்னை
நித்தம் நெஞ்சில் கேட்டல் ஏன்டி
மலரா மலரின் மகரந்த தேனை
நுகர வெறுத்த நிலையும் ஏன்டி
பொல்லா இரவின் கள்ள நிலவை
நித்திரை இன்றி வெறித்தல் ஏன்டி
இமைக்கா விழியால் சொப்பனம் கண்டு
விழிவழி குருதி வழித்தல் ஏன்டி
ஏன்டி ஏன்டி என கோடி கேட்டும்
ஏனோ உன்னில் மொழி இல்லை
அழகே விடை நீயே என்றால்
இச்சாபம் இனி தீர இறையில்லை
$வினோ....