என் உயிர் என்னவர்

அலையென அவர் சிரம்கொண்ட முடி
அலையினை தழுவதுபோல் என் கரங்களால் கோதிடுவேன்,
அரிவாலும் தோற்கும் கூர்மையான பார்வை
ஆழம் அறியாதே பார்வைதனிலே தினமும் மூழ்கிடுவேன்,
அதற்கேற்ப வீசும் வில்போன்ற புருவம்
அதனை பூவாக மாற்றி வாசமாகிடுவேன்,
அன்பும் அதிர்வும் வீசும் அழகிய உதடு,
அல்லிவிழி மூடாது அமிழ்ந்து ரசித்திடுவேன்,
அருவியே அறிவுரைகேட்க்கும் வார்த்தைகள்
அனுதினமும் கேட்டு அதன்வழி நடந்திடுவேன்,
அன்னம் அமர்ந்தார்போல் மூக்கு
அவர் குறும்பு செய்தால் கிள்ள ஏதுவானது,
அமைதியையும் அறிந்திடும் காது
ஆசையோடு மௌன பாஷை பேசிடுவேன்,
அளவில்லாது உதவும் அரவணைக்கும்
அடிதடி என்றால் கண்டிக்கும் கரங்கள்
அடிக்க வைக்க குறும்பு பல செய்வேன்
அடிக்காது சிரித்து தலையில் கொட்டி
அரவணைத்து கைக்கோர்த்து தீண்டிடுவார் தென்றலென,

குறும்புகள் பல செய்து மாட்டிக்கொள்ளாது தப்பிக்கும்
காற்றையும் தோற்கடிக்கும் புயல்போன்ற நடை,
கள்ளமில்லா முத்துக்கள் சிதறும் குறுநகை - அதுவே
கொள்ளைகொண்ட என்னிடமுள்ள சிறந்த நகை,
கரையில்லா புனிதமான வெண்ணிற மனது
காதலில் எனை வீழ்த்திய பூப்போர்,
காரணமின்றி சிரிக்க செய்யும் நினைவு,
கொஞ்சலான பேச்சு
கோபம்கொண்டாலும் குறைகூறாத கணவர்,
குழந்தையென நினைத்து நான் தரும் துன்பங்களை தாங்கும்
கார்முகில் கவியவர் !!!

அவரே என் உயிர் என்னவர் !!!
ச.அருள்

எழுதியவர் : ச.அருள் (6-May-17, 4:28 pm)
பார்வை : 414

மேலே