அடிமனதைக் கொத்திவிட்டு அன்னமகள் நடந்துசென்றாள்
அரிவையர் கூட்டத்தில் ஆரணங்கு இருந்தாள்
விண்மீன் நடுவே வெண்ணிலா தெரிந்தாள்
வெக்கைக் கொதிப்பால் வியர்க்கும் நேரத்தில்
தேகம் முழுதுவதும் தென்றல் வீசியது
கன்னியவள் என்னைக் கடந்து செல்கையில்
பூங்காவில் சொலுக்கும் பூக்களின் நடுவே
தனியாகத் தெரிந்தது தாமரை முகம்
அருகில் செல்கையில் அவளை நோக்க
கன்னம் மின்னக் கயல்விழி சிரித்தாள்
அதரப் பெட்டகத்தின் அடியே வைத்திருந்த
கோஹினூர் வைரங்கள் கொத்தாகச் சிதறின
ஆழமாய் எனது அடிமனதைக் கொத்திவிட்டு
அன்னப் பறவை அடியெடுத்து மறைந்தாள்
ஆக்கம்
அஷ்ரப் அலி

