என்னை நீ பிரியும் தருணம் 555
என்னவளே...
நீயும் நானும் ஒன்றென
வாழ்ந்த போது...
புகைபிடிக்காதே நுரையீரல்
கருகிவிடும் என்றாய்...
அந்த நிமிடம் தூக்கி எறிந்தேன்
என் ஆறாம் விரலை...
ஏனோ இன்று என்னை
நீ தூக்கி எறிந்தாய்...
உன் விழிகளில் கலக்கம்
இன்றி எனக்கு கொடுத்தாய்...
உன் திருமண அழைப்பிதழ்...
உன் பிரிவுதான்
என் இதயம் கருகுதடி...
என்னோடு நீ இருக்கும்
போதெல்லாம் புன்னகை பூப்பாய்...
என்னை நீ பிரியும் தருணம்கூட
எப்படி உன்னால் முடிகிறது...
புன்னகையோடு நீ வலிகளை
மறைத்துக்கொள்கிறாயா...
எனக்கு மறக்க கற்று
கொடுக்கிறாயா...
சொல்லிவிட்டு
செல்லடி பெண்ணே.....