methane என்னும் மிருகம்
சோர்வெனக் கில்லையிப் பாரில்
பல சோகப் போர்களெல்லாம் சாகும் வரை!
மண் கொன்றது போதும்!
எந்தன் பொன் கொன்றது போதும்!
திணிநிலம் பிளந்தது போதும்!
செங்கனலது கெட்டது போதும்!
உடலது உற்றது போதும்!
ஓடங்களெல்லாம் கரை தொட்டது போதும்!
மாரிகளெல்லாம் ஒப்-பாரிகளானது போதும்!
உயிர்க்கொன்று உடல் தின்ற அவலங்கள் போதும்!
இயற்கைவாயு என்றுந்தன் செயற்கைப் பெயர் போதும்!
இனிநீயும் வாழ்ந்து வந்தால், மண்ணில் மனிதமே சாகும்!