அது யாரு
யாரு? யாரு?
அது யாரு?
உனக்கு தெரியுமா அது யாரென்று?
தெரிந்தால் உன்னால் தெளிவாய் விளக்கம் தர இயலுமா அது யாரென்று?
யாரு? யாரு? அது யாரு?
இருள் சூழ்ந்த அண்டவெளியில் அணையாத அகல் விளக்காய் ஆதவனை ஏற்றி வைத்தது யாரு?
அது யாரு?
நீயும் தேடிப் பாரு?
யாரு? யாரு? அது யாரு?
நெருப்பால் நிறைந்த ஆதவனைச் சுற்றி கோள்களெல்லாம் சுற்றிவரச் செய்து, சில கோள்களுக்கு துணைக்கோள்களையும் வடிவமைத்து சுற்றிவரச் செய்தது யாரு?
அது யாரு?
நீயும் தேடிப் பாரு?
யாரு? யாரு? அது யாரு?
மின்மினிப்பூச்சிகளாய் நட்சத்திரங்களைப் பிடித்து அண்டவெளியில் நிரப்பியது யாரு?
அது யாரு?
நீயும் தேடிப் பாரு?
யாரு? யாரு? அது யாரு?
கொந்தளிக்கும் ஆழியை தேக்கி வைத்து, அதனடியில் வெடித்து சிதறி நெருப்புக் குழம்பைக் கொப்பளிக்கும் எரிமலைகளை வைத்தது யாரு?
அது யாரு?
நீயும் தேடிப் பாரு?
யாரு? யாரு? அது யாரு?
அருவமாய் எங்கும் நிறைந்து சுவாசமாய் உயிர்களை வாழ்விக்கும் காற்றை இந்த பூமியிலேயே தங்குமாறு சிறை வைத்தது யாரு?
அது யாரு?
நீயும் தேடிப் பாரு?
உனது பகுத்தறிவைப் பரிசோதித்துப் பாரு...
உடலைக் கடந்த சூட்சுமத்தை உணர்ந்தே பாரு...
யாரு? யாரு? அது யாரு?...