கனவு கைசேர காத்திருப்பேன்

உறக்கம் கண்ணை தழுவினால்
உளறல் என்னுள் அவர் கனவினால்,

அறியாத பாதையில்
அவரோடு கைக்கோர்த்து
அமைதியில் ஓர் பயணம் ,

நெடுந்தொலைவிற்கு பின்
நிமிர்ந்து பார்த்தேன்
நட்டநடு காடு - ஒரு
நிமிடம் பயத்தில் கண்ணை கைகளால்
நான் மூடினேன்
நெஞ்சம் பதட்டத்தோடு - கை
நீட்டி அவர்கரம் நான் தேட
நிற்காது வீசும் காற்றே கையில் சிக்கியது,

விழித்திருந்து தேட தொடங்கினேன்
விளையாடாதிரும் விரைந்து வாரும்
வண்ணம் அனைத்தும் கருமையாக
விஸ்வரூபம் எடுத்தார் போல் பயமாக உள்ளது,

நேரம் செல்ல செல்ல
நினைவில் வராத பயங்கர சத்தம்
நெருங்கியது ....
நடுக்காட்டில் பயத்தைகாட்டிலும்
நாயகனின் பிரிவு அழுகைதந்தது
நெஞ்சம் நிறைந்த அவர் முகமே
நின்றாடி நெருக்கி அழுகை தந்தது ,

கண்ணீர் அது கசிந்து
மண்ணில் விழும் முன்னே
கையில் ஏந்தி
கண்ணே கண்ணை வதைக்காதே
காற்றில் நீரை தெளிக்காதே
கணவன் நான் இருக்க
கண்ணை நீர் தழுவலாமா ?!

சிலநொடியும் பிரிய மாட்டாயோ என்று
சிரித்தபடி அவர் கேட்க
சீரி முறைத்தபடி நான்
சிந்தும் நீர்த்துளி பிடித்தால்
சிங்கார அன்பனோ
செல்லும் பேசாதீர் என்னிடம் என்று
சென்றேன் பத்தடி முன்னே ,

அடி என் செல்லமே
ஆருயிர் கண்ணவனை
ஆத்திரத்தில் வையலாமோ
அடிதூரமும் விலகி செல்லலாமா என்றபடி
அருகில் வந்து கைபிடித்து நில்லடி என்றார்,
ஆருயிரோ ம்ம் விடும் கையை என்று நான்
அவரிடமிருந்து விடுபட முயற்சித்தேன்
அவரோ ஒரே இழுப்பில்
அரவணைத்திட்டார் அதே சிரிப்போடு,
ஆசை நாயகன் ஏன் விட்டு பிரிந்தார்
அடுத்து அரவணைக்கவும் செய்தார் என்றேன்,
அது என்னவளின் காதுக்கென
அழகிய மலர்கொய்து வந்தேன் என்றார் ,

என்ன காதுக்கா ? என்று முறைத்ததும்
இல்லையடி பிழையாயிற்று
என்னவளின் காதலுக்கு ?!!!
இன்னும் இந்த கிண்டல் மட்டும் மாறவில்லை ,
இவ்வாறே குறும்பின் கணவரின்
இதயம் சாய்ந்தபடி உலகம் மறைத்தபடி
இதமான பயணம் சென்றது திரும்ப
இல்லம் செல்லும்வரையிலும் !!!

இன்னும் நான் விழிக்கவில்லை
விழிதிறக்கவும் விரும்பவில்லை
விரலோடு அவர் கையும் கனவிலிருக்க
விழித்தெழுவேன் கனவு
விண்ணையெட்டும் நினைவாகும்போது
விரலோடு விரல்பிடித்து மன்றத்தில் !!

எழுதியவர் : ச.அருள் (8-May-17, 8:41 pm)
பார்வை : 378

மேலே