என்னவளே
உன் தேகச் சூட்டில்
கரைகின்ற மெழுகாய்;
கரைந்தேனே நானும்
தனியாளாய் இன்று!
உன் மூச்சுக்காற்றால்
உண்டான புயலால்;
தகர்ந்தேனே நானும்
மரவேராய் இன்று!
உன் காது மடலில்
என் காதல் சொல்ல;
மறுத்தாயே அன்று
மறைத்தாயே இன்று!
என் காதல் பெண்ணே
கண்ணாணக் கண்ணே;
வருவாயா மீண்டும்
நம் காதல் கொண்டு?