மழலையும் மழையும்

தத்திவந்து தூக்கச்சொல்லும் மழலை நீள் விழியகழுகையில்
வளியும் ஏகாந்தம்!
முதல் நாளிரவு பெய்தமழையின் சாரத்தில் விடியும் அதிகாலை பொழுதின் வருடல்!
எது பேரழகு?
குனியச்சொல்லி தலையில் குட்டிவிட்டு குதூகளிக்கும் குழந்தையின் சிரிப்பு!
முகத்தில் சாரலை தூவிவிட்டு மனம்தன்னை நனைத்துவிடும் மழையின் சிலிர்ப்பு!
எது பேரானந்தம்?
மறுப்பதை ஏற்காமல் மறுவார்த்தை பேசவிடாத
கண்ணீரில்லா அழுகை!
காதை கிழிக்கும் இடியோசை
காற்றில் கலையும் கருமேகம்
நீர்தரா நீல்வானம்!
எது பேரேமாற்றம்?
மழலையும் மழையும்
வாழ்வின் வரம்..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-May-17, 12:30 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 234

மேலே