தூய்மை துடைப்போபம்
தூய்மை துடைப்(போ)பம்
ஒருமுறை இனிப்பை திண்றுவிட்டு அதன் காகித்தை வீட்டில் வீசிய குழந்தையை கண்டித்த அம்மாவிடம் குழந்தை கேட்டதாம்.. "இந்த சிறிய காகிதத்தை வீசியதால் பெரிதாய் என்ன நடந்துவிடுமென்று" தாய் சொன்னாராம் "நீ வீசிய காகிதத்தில் இருக்கும் இனிப்பைத் தின்க எறும்பு வரும்.. அந்த எறும்பைத் தின்க பல்லி வரும்.. பல்லியைத் தின்க அரணை வரும்... அரணையைத் தின்க பாம்பு வரும்.. பாம்பைத் தின்க கழுகு வரும் " என்று
இப்படியே நாம் ரோட்டில் வீசீய குப்பையை பெருக்க ஒரு ஆளை நிமித்து அவன் ஊழலைத் தடுக்க கண்காணியை (supervisor) நியமித்து.. கண்காணி ஊழலைத் தடுக்க அதிகாரியை நியமித்து.. அதிகாரியின் ஊழலைத் தடுக்க அரசியல்வாதி என்ற கழுகிடம் நாட்டை இரையாக்குகிறோம்..அறியாத அந்த குழந்தையாய் இன்றும் நாம்
-மூர்த்தி