என்னை ஏனடா நேசித்தாய் நீ 555
என்னவனே...
நான் தோழிகளோடு வந்தாலும்
தனிமையில் வந்தாலும்...
மண் பார்த்து நடக்கும் நான்
எப்படி உனக்குள் வந்தேன்...
பேருந்து நிலையம்
கல்லூரி வாசல்...
எனக்குமுன் அங்கிருப்பதை
கண்டு இருக்கிறேன் உன்னை...
அப்போதெல்லாம் தெரியாது நீ
எனக்காக காத்திருக்கிறாய் என்று...
ஒருநாள் என்முன்னே
வந்து நின்றாய்...
உன் காதலை சொன்னாய்
தோழிகள் தூதுவரவில்லை...
உன் கண்பார்த்த காதல்
எனக்கு ரொம்ப பிடித்தது...
அன்று முதல் பல இரவுகள்
உறங்கா விழிகள் எனக்கு...
நான் தெரிந்து தெரியாமல்
செய்யும் தவறுக்கு...
என்னை மன்னிப்பாய் என்
நெற்றி பொட்டில் முத்தமிட்டு...
நான் வர தாமதமானாலும்
நீ புன்னகையோடு காத்திருப்பாய்...
இன்று ஏனடா எல்லாம்
எதிர்மறையாக என்னவனே...
பல மாதங்களாக நான்
காத்திருக்கிறேன் உனக்காக...
எங்கே சென்றாய் நீ நான்
செய்த தவறுமென்ன சொல்லடா...
என் உள்ளத்தில் காதலை
விதைத்துவிட்டு...
அறுவடை செய்யாமல்
எங்கே சென்றாய் நீ...
இன்று உன் உறவுகளுக்காக
என்னை வெறுப்பவன்...
ஏனடா அன்று என்னை
நீ நேசித்தாய்...
நீயும் நானும்
சென்ற பாதையில்...
நான் மட்டும் இன்று
தனிமையில்...
என் விழிகள் ஈரமாக...
என்னை நீ பிரிந்த நாள் முதல்
உறங்கா விழிகள் என் விழிகள்.....