நோபல்
நோபல்
............................
நமது-
தலைவர் சொன்னதை
கேட்டுக்கொண்டிருந்தாய் தானே!
இன்னும்
கொஞ்ச நேரத்தில்
எல்லை வந்துவிடும்...
மீண்டும் சொல்கிறேன்-
தயாராக இரு!
இன்னும் கொஞ்ச நேரத்தில்
எல்லை வந்துவிடும்...
எல்லை வந்ததும்
என்ன செய்யப்போகிறாய்?
மீண்டும் சொல்கிறேன்
எல்லை வந்ததும்
உடனே வீசியெறி!
ஆப்கான்வாசிகள் என்றோ-ஏதும்
அறியாத விவசாயிகள் என்றோ
பெண்கள்-
குழந்தைகள் என்றோ
பரிதாபம் காட்டிவிடாதே!!!
நமது தேசத்தின்
குண்டுகளின் தாய்க்குண்டை-
உடனே வீசியெறி!!!!
மீண்டும் சொல்கிறேன்-
பரிதாபம் காட்டிவிடாதே!!!
அவர்கள் அடிப்படைவாதிகள்-
அத்தோடு பயங்கரவாதிகள்
அதுமட்டுமல்ல-
நாளை உனக்குமொரு
''நோபல்" கிடைக்கலாம்
**சவாளையூர் முஜாஹித்