குடைக்குள் மழை
அந்திமாலை நேரம் , மேகமூட்டம் போலும் ,
தென்றல் என்னவோ உன்னை வருடி விட்டுத்தான் சென்றது ,
மழைச்சாரலோ உன்னை முழுதாய் நனைத்தது !
நீ பிடித்த குடை போதாதென்று
சாரலும் உன்னுடன் கைகோர்த்து குடைபிடித்தது
மற்ற சாரல்களை உள்ளே விடாமல்
தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டும் தான் போலும் !!
நான் மட்டும்தான் உன்னை தொடவேண்டும்,என்ற
பேராசை எனக்கு மட்டுமல்ல, அந்த
மழைச்சாரலுக்கும் தான் போல !!!