தனிமை

வாழும் உலகின் உண்மை முகம் உணர்ந்து போனேன் உன் பிரிவில் ...
இருள் சூழ்ந்த எந்தன் கருவறை நாட்களை விட ..
என் தந்தையின் கல்லறை நாட்கள் தனிமையின் கொடுமையை உணர்த்தி போனது
பார்ப்பதும் சிரிப்பதும் உன் மடிமீது கிடப்பதும்
கற்பனையில் மட்டுமே சாத்தியமானது
நிஜத்தை வெறுத்து கனவின் நிழலை விரும்பும் பேதை நான்
இப்பேதை சிரிக்க மட்டும் தெரிந்தவள் அல்ல........
மனம் கொண்ட வலிகளை மறைக்கவும் தெரிந்தவள்

எழுதியவர் : (14-May-17, 1:18 pm)
Tanglish : thanimai
பார்வை : 101

மேலே