நல்லவன் என்னும் நான்
"காதல் "
மறுக்கப்பட்ட வார்த்தைதான்
எனக்கும் - காரணம்
"நல்லவன்" என்னும் நான் !!!
கண்களில் நுழைந்த
காதல் இதயத்தினுள் இறங்க
மறுக்கிறது - காரணம்
காமமில்லை; கடமைகள் கொண்ட
"நல்லவன்" என்னும் நான் !!!
காதலை உரைக்க
ஆயிரம் வார்த்தைகள்;
அதனைக் கரைக்க உண்டு
அன்னையின் கண்ணீர்த்துளிகள் - காரணம்
சாதி மட்டும் இல்லை
"நல்லவன்" என்னும் நான்!!!
மனதில் பதிவாக்கியவளை
மதியால் நினைக்கவும் முடியாமல்
விதியின் சதியென அவள்
நினைவுகளைச் சிதைக்கவும் முடியாமல் போன
"நல்லவன்" என்னும் நான் !!!
பிடித்தவளை மண என்னும்
இதயச்சொல்லை விட; சாதியில்
கிடைத்தவளைக் காதலி என
இன்றோர் மொழி ஓங்க - காரணம்
நான் சாதியவாதி இல்லை
"நல்லவன்" என்னும் நான் !!!
எனக்கு நானே கேட்டவனாகிப்போன
"நல்லவன்" என்னும் நான் !!!