தாய் அவளே அன்பு தெய்வம்

முதுமை வாழ்க்கையில் ஒரு பருவம்
என்பதை சற்றே மறந்து தாரத்தின்
போதனையில் மதி இழந்து தன
தாயை அன்புடன் மூப்பில் காக்க
தவறும் பிள்ளை, தாயை
முதியோர் இல்லம் சேர்கிறான்
அப்போதும் அந்த தாய் அவன்
பிழையை எண்ணி நொந்துபோவதில்லை
பாவம் அவன் என்னசெய்வான்
கால சுழலில் சிக்கி தவிக்கிறான்
இறைவா அவனை சுகமாய் வாழவிடு
என்றுதான் காலம் கழிப்பாள்
தாய் அவள்தான் அன்பு சாகரம்
அன்பே ஆண்டவன் என்றால்
தாய் என்றும் தெய்வமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (14-May-17, 1:44 pm)
பார்வை : 129

மேலே