காதல் ரோஜா

என் உயிரே...
பூவாக நீ மாற வேண்டும்
உனை சுமக்கும் பாக்யம்
எனக்கென்றும் வேண்டும்
என் இதய துடிப்பும்
என் கொசுவ மடிப்பும்
நீ தான் என் உயிரே...
என் அன்பே...
தாயாக நீ மாற வேண்டும்
உன் மடி மீது சேயாக
நான் சாய வேண்டும்
தினம் நான் கானும்
முதல்காட்சி நீயாக வேண்டும்
என் இமைமூடும் கடைசி
காட்சியும் நீயாக வேண்டும்...