காதல் ஒன்று செய்யாதிரு

விழியால் பாவை விளித்தாலும்
நூலிடையால் மெல்ல பிணைத்தாலும்
நீ காதல் ஒன்று செய்யாதிரு..
இரவின் தூரம் அறிந்தாலும்
அதுஇன்னும் மெல்ல விரிந்தாலும்
நீ காதல் ஒன்று செய்யாதிரு..
எச்சில் அமிழ்தம் தின்றாலும்-அது
அவள் முத்தம்தனில் என்றாலும்
நீ காதல் ஒன்று செய்யாதிரு..
கவிதனை பல தரித்தாலும்
நல்கவிஞன் என்றே ஆனாலும்
நீ காதல் ஒன்று செய்யாதிரு..
சொப்பனம் அழகாய் கண்டாலும்
சுகமாய் வாழ்வு சென்றாலும்
நீ காதல் ஒன்று செய்யாதிரு..
மணணில் சொர்க்கம் கொண்டாலும்
நித்தம் மகிழ்வை உண்டாலும்
மணந்திட மடலேற மறுக்கும்
நாணத்தோடு
நீ காதல் ஒன்று செய்யாதிரு...


$வினோ

எழுதியவர் : வினோ.... (16-May-17, 9:46 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 73

மேலே