அன்பு வழங்கிய ஆசி

அக்னி பிழம்பை உமிழ்ந்து, எனது வாழ்க்கை, என் விருப்பம் போல் வாழ்கிறேன் என்ற கருத்தில் ஊறியவாறு, என் மீது அன்பு கொண்டோரையெல்லாம் காயப்படுத்தி நரம்பில்லா நாக்கால் துன்மொழி பேசி மூளையில் அகந்தையைக் குடியேற்றி எனது அமைதியை இழந்து எனது சுற்றத்தின் அமைதியைக் கெடுத்து வஞ்சம் செய்யும் துணிவுடையோனாய் இருதயத்தில் அன்பென்பது அறவே இல்லாது துன்மார்க்கம் வழியில் சென்று, நாகத்தின் நஞ்சினைவிடக் கொடிய நஞ்சினை சுவாசக்காற்றில் கலந்து அகிலத்தின் அஞ்ஞானத்திற்கு என்னுள் இடமளித்தவனாய் வாழ்ந்தால் அது அன்பின் சாபமென்று அறிதலாற்றாது போகாதென்று உரைக்கும் இக்கவியினுள் புதைந்துள்ள உண்மையானது உணரப்பட்டால் உணர்ந்த ஒவ்வொருவரும் நல்ஞானத்தைப் பெற்று நல்வழி சென்று மன அமைதியென்னும் அமிர்தம் அருந்தி அநீதி நிலை துறந்து அகிலம் நல்வாழ்க்கை முறையை பிரித்தரியும்
பாலில் கலந்த தண்ணீரைப் பிரித்து, பாலை மட்டுமே உண்ணும் அன்னப்பறவையாய்....
இதுவே இருதயத்தில் கூடி கொண்ட உண்மையன்பு வழங்கிய ஆசி...
அன்பின் வார்த்தைகளை விசுவாசி...
அவற்றை உயிரென சுவாசி...
உணர்வாய் உண்மையன்பின் உண்மையான சாட்சி...
எங்கும் பரவட்டும் உண்மையன்பின் அரசாட்சி....