ஏனோ காரணம் தெரியவில்லை
காதலியோ...?
உன்னை கண்ட நாள் முதல்
எவ்வித நிகழ்வுமில்லை
என்னுள்....
சூனியமாக உலவுகிறேன்....
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன் சிரிப்பை கண்ட நாள் முதல்
என் சிரிப்பை மறந்தேன்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன் குரலை கேட்ட நாள் முதல்
பிறர் குரல் கேட்க செவிடனனேன்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன் கண்களை கண்ட நாள் முதல்
கண்களையே தெரிவதில்லையே எனக்கு
கடமையும் மறக்கத் தொடங்கினேன்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன் பெயரை கேட்ட நாள் முதல்
உன் பெயர் மட்டுமே
என் உதடுகளில்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன்னை கண்ட நாள் முதல்
பரீட்சைப் பேப்பரில் என் பெயரைத்தவிர
விடைகளாக உன் பெயர் மட்டுமே
ஏனோ காரணம் தெரியவில்லை....
நீ கொய்யாவை கடித்த நாள் முதல்
என் அய்யா சொல்லியும் பசிபதில்லை
பார்த்தாலும் பிடிக்கவில்லை
உன்னையல்ல......
சோறைத்தான்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன் முகத்தை பார்த்த நாள் முதல்
உன்தோழி நிலவோடு தான் பேச்சு எனக்கு
உனை பற்றியே எட்டுமணி நேரமும்
அமாவாச நாளை தவிர்த்து....
என் கண்கள் தூக்கத்தால் சோர்வடையவில்லையே...
ஏனோ காரணம் தெரியவில்லை....
நீ பேசியதை கேட்ட நாள் முதல் – நான்
எவருடனும் பேசுவதில்லை – எனை
எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள்
ஏன்? உன் மீது பைத்தியம் அல்லவா...?
எனக்கும் , அவர்களுக்கும் , ஏன் உனக்கும்
ஏனோ காரணம் தெரியவில்லை....
காதலிப்பவர்கள் எல்லாம்
இதைத்தான் சொல்கிறார்கள்
எனக்குள்ளும் இதே மாற்றம்தான்
ஏனோ காரணம் தெரியவில்லை....
உன்னை கண்ட நாள் முதல்
என் பெயரும் மறந்துவிட்டதே
இதற்கு பெயர் தான காதலா....?
ஏன் மறந்தேன்...?
என் பெயரை...?
ஏனோ காரணம் தெரியவில்லை....
****************
நவம்பர் 1996ல் எழுதப்பட்ட முதல் காதல் கவிதை