என் வாழ்க்கை
என்னருகே நீ இருந்தால்
உனக்குள்ளே நானிருப்பேன்
எனக்குள்ளே நீ இல்லாமலா
உன்னருகில் நானிருப்பேன்...
நேற்று பார்த்த பார்வைக்கும்
இன்று காணும் காட்சிக்கும்
நிறைய உண்டு வேறுபாடு
இல்லையென்று நீ மறுக்கலாம்
இந்த நெருக்கத்தை உணராமல்...
நாளுக்கு நாள்
நமக்குள் நெருக்கம் பெறுக காரணம்தான் என்ன?
கருத்தொத்து இன்று
ஒன்றோடு ஒன்றாய் கலந்த பின்னே
பிரிவு என்பது
உயிரை போக்குவது...
உயிர் இன்று இல்லாமல்
எப்படி இங்கு வாழ்வது?
புரிந்து கொள்...
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!