அக்னிநட்சத்திரம்
சுட்டு எடுக்கிறான்!
வாட்டி எடுக்கிறான்!
வதக்கி எடுக்கிறான்!
தாளித்து எடுக்கிறான்!
அவிய வைக்கிறான்!
வேக்காடு தருகிறான்!
நானிலத்தின் அகல் போலும்
விளங்கி புவியின்
பகலுக்கு காரணமாகிறவன்
நளனுக்கு நகல் போலும்
ஆயினன் போலும்!
(நளன்_சமையல்கலையில் தேர்ந்தவன்.
நகல்_ ஜெராக்ஸ் காப்பி)