நாணயம்
நான் நயமாகப் பேசுவேன்
நாணயமும் நிறைய உண்டு என்று சொல்வோரே.
சில பல நாணயங்கள்
இன்று செல்லாக் காசுக்களாகி
பேரிச்சம்பழம்கூட வாங்க முடியா நிலையில்..
மதிப்பாய் இருந்த நாணயங்கள்
மதிப்பின்றி குப்பையிலே..
ஆனால் வாழ்வில் நாணயம் கடைபிடித்தால்
நிச்சயம் நாம் ஆவோம் நட்சத்திரமாய் உச்சியிலே...