மழை இரவு
குப்புறப் படுத்திருந்தான்
மயங்கிக் கிடந்திருந்தான்
சுருண்டு விழுந்திருந்தான்
வயிறு சுருண்டிருந்தான்
பசியில் துடித்திருந்தான்
நீரின்றி தவித்திருந்தான்
அவன் நிலை மனிதரை இயக்கவில்லை
மேகத்தின் மனதினை இயக்க
அழுது புரண்டது இரவினில் மழையாய் பொழிந்து
அவன் தாகம் தீர்த்தது