பூவே எனக்காய் பேசிடு
சிரிக்க சிரிக்க பேசிடும் சின்னப் பூக்களே
உலகத்திலே பூவாக ஏன் பிறந்தீங்க?
மணக்க மணக்க வாசம்வீசும் செல்லப் பூக்களே
பறித்துவிட்டால் வாடிவிட யாரு சொன்னாங்க?
சுட்டிமுதல் தாத்தா வரை பூக்கள் பிடிக்குமே
பட்டிக்காடும் பட்டணமும் போட்டோ பிடிக்குமே
வீட்டச்சுத்தி பூக்கள் இருக்க வீடே மணக்குமே
தோட்டத்திலே யுள்ளபூக்கள் மனதை மயக்குமே
எல்லா ஊரும் பாத்திட்டீங்க எங்கூரு வாங்க
தண்ணிமட்டும் கேக்காதீங்க துளியும் இல்லேங்க
குல்லா போட்ட கோமாளி பார்த்தும் சிரிப்புவர்லீங்க
தண்ணித்தேடி ஊருஊரா அலையுறோம் நாங்க
கடவுள்கிட்ட போகும் பூவே எனக்காய் பேசிடு
எல்லோருக்கும் பகிர்ந்துவாழும் புத்தி தரச்சொல்லு
படிக்காட்டாலும் மனு ஒண்ணு எழுதித் தரட்டுமா
உன்னைப்போல நானும் சிரிக்க விடிவு பொறக்குமா?