யுத்தம் அல்ல வாழ்க்கை
படிப்பாய்.. தெய்வம் கல்வி
கேட்பாய்.. அறிவுக் கேள்வி
பகிர்வாய்.. உன்னால் முடிந்ததை
சொல்வாய்.. உனக்குத் தெரிந்ததை
சிரித்த முகமே அழகு
அன்பாய் நட்பாய் பழகு
பரந்து விரிந்த உலகு
தீயவைக் கண்டால் விலகு
சுத்தம் என்றும் சுகமே
நித்தம் குளித்தல் நலமே
பித்தம் தெளிய ஆடி
சித்தம் குளிரவே படி
சத்தம் வகுப்பில் வேண்டாம்
சமாதானம் பிடித்துக் கொள்ளு
யுத்தம் அல்ல வாழ்க்கை
நிம்மதியெனவே நீயும் சொல்லு