காதல் திறவு
முகத்திற்கு திரை யிடுவது முகலாயப் பெண்களுக்குச் சிறப்படீ!
வல்லி யிடையினையும் மார்பினையும் திரை யிட்டு மறைப்பது குமரிய மரபடீ!
பெண்ணே! எனக்கு இடமில்லாமல் உன் உள்ளத்திற்கு திரை யிடுவது மிகத் தவறடீ!
உன் உள்ளத்திரையைக் களையவே நான் பயின்று வந்தேன் காதல் என்னும் திறவடீ!