களங்கப்பட்டதே
சேய் அழுகுரல் கேட்ட
தாய் போல்
உன் துயர் கண்டு நான் வந்தேன்...
தன் பசிதீர வேட்டையாடும்
வேங்கை போல
உன் துயர் தீர என்னை பணையமிட்டாய்...
முதலை விழிநீர் கண்டு
உதவவந்த மான்போல
உன் போலி நட்பால் வாடும்
உன் தோழன்...
கவலைகொண்டது என் நிலை
அறிந்தல்ல நண்பா
உன்னால் களங்கப்பட்ட நம் நட்பை நினைத்து...