நாகரிக தமிழச்சியே

நாகரிக தமிழச்சியே !
அதிகாலை சூரியன் உன் பார்வைக்காய் ஏங்குகிறது ......ஆனால் நீயோ பத்து மணிக்கு கடிகாரம் அலற எழும்புகிறாய் !! உன் வீட்டு வாசல் உன் கோலத்திற்காய் காத்திருக்கிறது ஆனால் உனக்கோ கண் இமைக்கும், இதழுக்குமே வண்ணம் தீட்ட நேரம் போதவில்லை !! அம்மா தரும் அன்பான இட்லியை ஒதுக்கிவிட்டு வேகாத உணவுக்காக வரிசையில் நிற்கிறாய் !! உன் நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக பாம்புகளும் பூரான்களும் பொட்டு என்ற பெயரில் நெளிகின்றன ......... தாய் பாலையே புட்டிபாலாக மாற்றி விட்டாய் நீ !! குழந்தைகள் விளையாட வேண்டிய உன் மடியை மடிகனினிகள் ஆக்கிரமித்து விட்டன.......! நடந்து போக வேண்டிய இடங்களுக்கு காரில் சென்று விட்டு, வீட்டின் உள்ளேயே பட்டை வார் உடற்பயிற்சி சாதனத்தில் ஓடி கொண்டிருக்கிறாய் ...!!
பாவாடை தாவணியை பார்த்தாலே பயந்து ஓடுகிறாய் ........ நீ தமிழ் வார்த்தையை உச்சரிக்கும் போது அர்த்தத்தின் ஆயுள் பாதியாக குறைகிறது .......இவ்வளவு ஏன் "தமிழ் " என்ற வார்த்தையையே ஒழுங்காக உச்சரிக்க மறுக்கிறாய் ...... இது போதாமல் உன் பிள்ளையையும் "மம்மி" என்றழைக்க உத்தரவிடுகிறாய் .........பெண்ணே போதும் !! நீ கண்ணகியாய் மாறாவிட்டாலும் தமிழ் பண்பாட்டை கற்று கொண்டு கண்ணியமாவது வாழ பழகி கொள் . !!!!!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (17-Jul-11, 1:38 pm)
சேர்த்தது : selvi pandian
பார்வை : 313

மேலே