சொர்கத்துக்கு வழி

சொர்கத்துக்கு வழி

ஓடாம ஆடாம,
ஒரு வேலையும் செய்யாம,
உக்காந்து படிச்சு,
வாங்குன பட்டம் வச்சு,
வேலைக்கு போனியே!
அண்ணாந்து பார்க்கும்,
அரண்மனைய கட்டி,
நீ மட்டும் தங்குனியே!
சம்பாதிச்ச காசு பூரா
புது புது நோயால
ஆஸ்பித்திரில கொட்டுனியே!
அரக்க பறக்க சாப்பிட்டு,
அடிச்சு புடிச்சு வேலைக்கு போயி
காசு பணம் சம்பாதிக்குற
நகர வாழ்க்கை - உண்மையில
நகர வாழ்க்கையா? - இல்ல
நரக வாழ்க்கையா?

பள்ளிக்கூடம் போனதில்ல;
பாடங்கள படிச்சதில்ல;
ஆடுமாடு மேய்ச்சுகிட்டு,
நான் கட்டுன குடிசையில,
ஒருநாளும் துன்பமில்ல!

காடு கழணியில,
என் உசுரு கலந்திருக்கு!
கால்வயிறு குடிச்சாலும்,
மனசும் வயிறும் நிறைஞ்சிருக்கு!

நான் பாத்து நட்ட செடி,
பூ பூவா பூத்திருக்கு!
நான் விதைச்ச விதைநெல்லு,
வாசம் வீசி வளர்ந்திருக்கு!

சாயங்காலம் ஆனபின்ன,
திண்ணையில உக்காந்திட்டு,
தாத்தா பாட்டி கதை கேட்டு,
ஆத்தா மடியில் உறங்கையில,
உலகத்தையே மறப்போமே! - உண்மையில
சொர்க்கத்தையே காண்போமே!


Close (X)

5 (5)
  

மேலே