தமிழ்க் கடவுள்
ஆறு முகத்துடையான் ஆறு படையுடையான் பன்னிரு கரம் கொண்டு பாவ வினை போக்குவான். சக்தி வேலுடையான் அழகு முகமுடையான் வெற்றி வேல் கொண்டு வினையெல்லாம் தீர்த்திடுவான். முத்து முகத்தவனை முருகா! முருகா! என்றழைத்தால் காக்கும் கதிர்வேலன் கன நேரத்தில் வந்திடுவான். வெல்லும் தமிழவனே! முருகன் வேல் கொண்டு பாரெல்லாம் வென்றிடுவாய்!