பிளந்த பாறை

அடைபட்டுவிட்டேன் குகையே
உன் அழகில் சிறைபட்டுவிட்டேன்
வசப்பட்டுவிட்டேன் மழையே
உன் சிறகில் இதப்பட்டுவிட்டேன்
விண்ணின் வலையில்
விண்ணப்பித்தேன்
வண்ணங்களின் விடியல்
சங்கமித்தேன்
கற்களின் மீது முத்தமிட்டேன்
புதற்களில் சேர்ந்து வாசமிட்டேன்
வீதியெங்கும் கால் பதித்தேன்
விடுதியொன்று அமைய நினைத்தேன்
தேங்கி நிற்கும் காயங்களில்
பொங்கிக்கொஞ்சம் ஓட நினைத்தேன்
-மனக்கவிஞன்