மனிதன், மனிதன்

போய் வர முடியாது என்று நினைத்த நிலவையும்,
எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட்டவன் மனிதன்.

பிரம்மாவின் படைப்பையும்,
கண்ணாடிக் குடுவைக்குள் சிசுவாய்த் தந்துவிட்டவன் மனிதன்.

கலைகளின் காட்சிகள் காலங்கள் கடக்க,
அலைகற்றையில் காட்சிகள் கண்டுவிட்டவன் மனிதன்.

வற்றாத நதிகள் என்றவைகளையும்,
வாய்க்காலாய் மாற்றிவிட்டவன் மனிதன்.

வான்வெளி மண்டலத்தில் ஓசோன் திரைப் படலத்திலும்,
ஓட்டை போட்டுவிட்டவன் மனிதன்.

போகும் தூரம் தான் என்றிருந்தால்,
சொர்க்த்தையும் சுரண்டி முடித்திருப்பான் மனிதன்.

எழுதியவர் : arsm1952 (21-May-17, 5:41 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 94

மேலே