உன் வருகைக்காய் தவமிருக்கேன்

உன் வருகைக்காய் தவமிருக்கேன்

உன் வருகைக்காய் தவமிருக்கேன் - நான்
உன்னைப் பார்க்காமல் தவிக்கிறேன் - உன்னைத்
தேடித் தேடி அலைகிறேன் நான் - மனம்
வாடி நாட்களைக் கழிக்கிறேன்

காதலிலே ஏங்க வைத்தாய்
கண்விழித்து தூங்க வைத்தாய்
கண்ணீரினில் மூழ்க வைத்தாய்
உன்னினைவில் மயங்க வைத்தாய்

அன்பே நீயில்லாமல் இன்பங்கள் இங்கேது
அன்பே நீயில்லாமல் என் ஜூவன் வாழாது
காலம் நம்மைப் பிரித்த போதும்
காதல் நம்மை சேர்க்கும் பாரு

என் உயிரும் உறவும் நீதானே
உன் நினைவோடு என்றும்​ இருப்பேனே
எந்நாளும் உன்னை மறவேனே
இது மெய்யே மெய்யே என் அன்பே!

ஆக்கம் : வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (21-May-17, 6:11 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 852

மேலே