கருத்து வேறுபாடும், நட்பும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர்.
அவர்களுக்கு இடையே எப்போதும் கருத்து வேறுபாடு ஏற்படும்.
அதனால், சண்டை வரும்.
ஒருநாள், அப்படி விவாதிக்கும் போது சண்டை வந்தது.
கோபம் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்..
இருவர் முகத்திலும் இரத்தம் வழிய,
சண்டை ஓய்ந்தபாடில்லை..
தீடிரென அந்த நண்பர்களில் ஒருவர் தனது நண்பனின் முகத்தில் இரத்தம் வடிவதைக் கண்டுத் தாக்குவதை நிறுத்திவிட்டுச் சொன்னார், " ஐயோ நண்பா உன்னை இரத்தம் வரும்படி தாக்கிவிட்டேனே. ", என்றார்.
அதைக் கேட்டு விழிப்படைந்த அந்த நண்பர், " நானும் உன்னை தாக்கி விட்டேனே நண்பா. ", என்றிட, நண்பர்கள் இருவருக்கும் அவரவர் மேல் கோபம் வர, " நண்பா உன்னைத் தாக்கிய இந்தக் கை எனக்கு வேண்டாம். ", என்று கத்தியை எடுத்து தன் கையை வெட்டத் துணிந்தார் நண்பருள் ஒருவர்...

அதைக் கண்ட மற்ற நண்பர், " வேண்டாம் நண்பா. இன்றிலிருந்து நம் கருத்து வேறுபாட்டை விட்டு விடுவோம். நாம் அவரவர் கருத்தில் கொண்ட பிடிவாதமே நம்மை தாக்கிக் கொள்ளத் தூண்டியது. ", என்றார். அந்த நண்பரும் அதை ஏற்றார்...
அன்றிலிருந்து இருவரும் கருத்து வேறுபாட்டை விட்டு, ஒற்றுமையாக அன்போடு வாழ்ந்தனர்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-May-17, 8:21 pm)
பார்வை : 382

மேலே