குயிலே பூங்குயிலே
குயிலே பூங்குயிலே
யாரை நினைத்துக் கூவுகிறாய்
யாரை அழைக்கப் பாடுகிறாய்
வசந்த மாலையை இன்னிசையாக்கும்
வண்ண இளவேனில் பறவையே !
காதலன் ஊடலில் வேறு கிளை மாறிவிட்டானோ
வேறு தோட்டத்திற்குத்தான் பறந்து விட்டானோ ?
காதலை நெஞ்சில் கூவும் கவிதைப் பறவையே !
உன் கூவலின் ரகசியம் என்னவென்று
எனக்குத்தான் சொல்லாயோ !
----கவின் சாரலன்