காக்கைச் சிறகினிலே
வண்ணக் கருமைச் சிறகு விரித்து
வானில் கா கா என்று கூவிப் பறக்கும்
இனிமைக் காகமே !
அன்னம் வைத்து கா கா என்று கூவி அழைத்தால்
நின்இனம் கூவி அழைத்து விருந்துண்ணும் கருவண்ணப் பறவையே
மனிதருக்கு முன்னோடியே நீ வாழ்க நின் இனம் வாழ்க
நின் கருமை நிறம் வாழ்க
வான் பறக்கும் நின் காக்கைச் சிறகுகள் வாழ்கவே !
-----கவின் சாரலன்