திசை அறியா பறவை சரியாக செல்கிறது கூட்டுக்கு - இயற்கை

எதிரே கவுண்டமணி செந்தில்
ஆனால் சிரித்துக் கொண்டே அழுகிறேன்
இந்த வெங்காயத்தால்...

*********************************************

மொத்தமே இங்கு பத்து(0 முதல் 9 வரை ) எண்கள் தான்
அதில் இருந்தே எண்ணில் அடங்கா எண்கள் உதயமாகின்றன...

***********************************************************************

1 + 2 +3 +4 +5 +6 +7 +8 +9 = 45 = 9 (4 +5 )
11 + 12 +13 +14 +15 +16 +17 +18 +19 = 90 +45 = 135 =9
21 +22 +23 +24 +25 +26 +27 +28 +29 = 225 = 9
31 +32 +........+38 +39 = 315
41 +......+49 = 405
51 + ......+59 = 495 = 18 = 9
61 + .....+69 = 540 +45 =585 =18 = 9

இப்படி 9 மிகவும் முக்கியமான எண்ணாய் அமைகிறது ....
ஒன்பது எண்களின் கூட்டல் 45 ...
அந்த 45 ம் ஒரு 9 தான் ...
அதே போல் ஒன்பதாம் வாய்ப்பாடு ...
1 * 9 = 9
18
27
36
45
54
63
72
81
90

99
108
117
126
135
************

உந்தன் கண்ணில் என்னை காண்கிறேன்
அதில் கண்ணீர் சிந்த விட மாட்டேன்
ஏன் என்றால் நீ அழுதால் நான் உடைவேன்

**************************************************************

ஒரு கோட்டுக்கு தேவை(தானே) இரு புள்ளி ..
ஒரு கோடு தானே பிரிக்கும் இரு பாகம் ..


**********************************

ஒரு எழுத்து மாறினால்
அதன்(ஒரு) வார்த்தை மாறுமே ...
அதன் அர்த்தம் மாறுமே ...
*************************************************

உயிரோ ...
மெய்யோ ...
உயிர் மெய்யோ ...
நீ என் ஆயுதமே ...
தமிழே ...
அனைத்தும் நீயே தாயே .....


(யாகாவராயினும் நா காக்க வேண்டும் ...நான் என் தமிழையும், யார் மனதையும் சிதைக்க மாட்டேன் ...

வார்த்தை கிடைத்தது என்றால்
அதை அப்படியே பேசக்கூடாது ...
அவ்வார்த்தைக்கொரு அர்த்தம் வேண்டும் ...
அவ்வார்த்தைக்கொரு கோர்வை வேண்டும் ...
அர்த்தமில்லாமல் பேசக் கூடாது ...
கோர்வையோடு தான் பேச வேண்டும் ...
அது யார் மனதையும் கோதக் கூடாது ...

சாதி மதம் எல்லாம் சாக்காடு ...
அதை தூக்கி எறி...
பூமி ஆகும் பூக்காடு ...

தமிழன் / தமிழச்சி
சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் ...

மனிதன் பிறந்த
பின்பு தான்
மதம் பிறந்தது

இயற்கை தான் இறை ...
அது தந்தது தான் மனிதன் ...

திசை அறியா பறவை சரியாக செல்கிறது கூட்டுக்கு ... (மனிதன் தான் தன்னிலை மறப்பான் ... )
பசித்த குழந்தை தாயிடம் தாவி சென்று
அவள் மார்பில் பாலை குடிக்கும் ...
மரத்திற்கு வேரை மண்ணிலும்
பூ காய் கனியை இரையாகவும் தந்தது
இயற்கை ...

இயற்கை இல்லாமால் யாரும் இல்லை ...
பூமியை காப்போம் ...
சுவாசிக்க காற்று தேவை ...
குடிக்க நீர் தேவை ...
வாழ பூமி தேவை ...
உண்ண உணவு தேவை ...
அதற்கு விவசாயம் வாழ வேண்டும் ...

செயற்கை இயற்கையை
அழுத்தாமல்(நசுக்காமல் ) பார்த்துக் கொள்வோம் ...
பூமியில் பூ மலர வேண்டும் ...
ரத்த ஆறு ஓடக் கூடாது ...
புல் முளைக்க வேண்டும் ...
குண்டு மழை பொழியக் கூடாது ...

அவரவருடைய அடையாளத்தை
இன்னொருவர் அழிக்கக் கூடாது ...( அவரவருடைய அடையாளம் அவர் அவருடையது ...யாரும் அழிக்க முடியாது ...எதற்காகவும் தன் அடையாளத்தை விட்டுக் கொடுக்க கூடாது ...
பணம் பதவி கிடைக்கிறது என்று உயிரை விட முடியுமா ?
உயிரானது நம் அடையாளம் ...

உன் அடையாளம் உன்னுடையது ...
என் அடையாளம் என்னுடையது ...

ஒருவரின் அடையாளம் அவரின் தாய் மொழி தான் ...
தாய் மொழியில் பேசுங்கள் ...
தாய் மொழி அழிந்தால்
உன் இனம் அழியும்
உன் அடையாளம் அழியும் ...
நீ அடையாளம் அற்றவனாகிவிடுவாய் ....

இனம் அழிந்தால் மொழி அழியும் - இலங்கையில்
மொழி அழிந்தால் இனம் அழியும் - இந்தியாவில் ( இந்தியாவின் தாய் மொழி இந்தி கிடையாது ...இங்கே பல மொழிகள் இருக்கிறது ...
நிறைய மொழிகளை (இனத்தை ) அழிக்கிறது ஹிந்தி ...ஹிந்தியா ...)

நான் இந்தியாவை சேர்ந்தவள் அல்ல ...( எழுபது வருடம் தான் இந்தியாவின் வயது ...ஆனால் நாங்கள் ஆதியில் இருந்தே தமிழர்கள் ...)
தமிழ் நாட்டை சேர்ந்தவள் ...
தமிழ் தான் என் அடையாளம் ...
என் நாடு தமிழ் நாடு
என் தாய் மொழி தமிழ் ...)
~ பிரபாவதி வீரமுத்து ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-May-17, 6:49 am)
பார்வை : 171

மேலே