விவசாயிக்கடன்

மழை நீர் தந்தது
வானம்

நல்ல பயிர் தந்தது
விவசாயம்

உயிர் தந்தவன்
இறைவன்.......

உண்ண சோறு தந்தவன்
உழவன்.......

கடன் தந்தது
வங்கி
பொழைத்து கொள்ளலாம்
என நினைத்தான்
அதை வாங்கி......

தவனைகள் கடக்க
முடியாது போனது
கடன் அடைக்க
அடங்கி போனான் தொங்கி.....

விவசாயி கடன் அடைப்பு
முயற்சி ஒன்றை தொடங்கி

நாங்கள்
செய்து விட்டோம்
நண்பர்களிடமும் வாங்கி.....

நீங்களும்
செய்வீர்கள் என
நிற்கிறோம் ஏங்கி.....

கரம் நீட்டுக
கடன் அடைக்க....

உதவி செய்வோம்
உயிர் காப்போம்......
🙏🙏🙏Samsu🙏🙏🙏

எழுதியவர் : Samsu (22-May-17, 11:57 pm)
பார்வை : 693

மேலே