அன்பே சர்வம்

காற்று வீச மறுக்கிறதா இந்த மனிதர்கள் தன்னை மாசுபடுத்துகிறார்களே என்று?

நிலம் தாங்க மறுக்கிறதா இந்த மனிதர்கள் தன்னை தோண்டி, தன் வளத்தை அபகரிக்கிறார்களே என்று??

சூரியன் உதிக்க மறுக்கிறதா இந்த நன்றி கெட்ட மனிதர்கள் தன்னை நிந்திக்கிறார்களே என்று???

அன்பே உன்னால் இயற்கையே கடமை தவறாத போது, அன்பே உன்னால் நிறைந்த நான் ஏன் கடமை தவற வேண்டும்????

அன்பு தான் சர்வமே...
அன்பில்லை என்பவனெல்லாம் வெறும் சவமே...
சித்தத்தில் நிறைந்திடு சிவமே...
சக்தி தந்திடு தவமே...

உலகை மாற்றிடும் அருமருந்தே...
நாடியவர்களுக்கெல்லாம் குறை தீர்க்கும் அள்ளக்குறையா விருந்தே...

தனிப்பெருங்கருணையின் அடித்தளமே...
உள்ளம் வறண்டுவிடாது நிறைந்திருக்கும் நீரூற்றே...
கண்ணே...
என் செல்லமே...
இயலாமை போக்கும் உழைப்பே...

கனவில் தோன்றி அருள் தந்த சக்தியே...
நினைவில் வாராயோ???
அகிலம் மாற நீயே மழையாய் மாறி பொழியாயோ???
இருதயங்களின் நீரூற்றாய் ஊறாயோ???

வாழ்வின் கனி அமுதே...
மன பிணி நீக்கி, அயர்வைப் போக்கும் அழகே...
மாசற்ற அகமே...
என்றும் மறைவில்லா ஈடிணையற்ற அன்பே...

நீயே தெய்வமாய் ஒளியின் வடிவாய் தந்த, தரும் அத்தரிசனம் கண்டே நாளும் பாடுகிறேன் உன்னையே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-May-17, 10:40 pm)
Tanglish : annpae sarvam
பார்வை : 741

மேலே