மோகக் காற்றே மோசம் செய்யாதே
மேகக் கூந்தலை மெல்லவே கலைத்து
மெல்லமாய் இடையிலே கரங்களை நுழைத்து
தேகச் சிவப்பை திரிந்து ரசித்து
தெவிட்டாக் கனியை இதழில் சுவைத்து
பாதம் பதித்துப் பாதை நடக்கையில்
ஆடை விலக்கி அவளைத் தழுவியே
மோசம் செய்கின்ற மோகக் காற்றே
அருகில் நிற்கும் ஆடவர் எம்மை
அறியாது தானா அமர்க்களம் புரிகின்றாய்
ஆக்கம்
அஷ்ரப் அலி