காயப்படுத்ததே

காயப்படுத்திவிடாதே..!
கண்ணே..! என் காதலை
கற்பனை என்று...

கண்மணியே..! – உன்
கண்களை காட்டு...
கடந்த ஜென்ம காதலை
காட்டுகிறேன்..!

காதல் வந்தால்..
கழுதையும் கவிபாடும்...

காற்றும் கண்ணீர் வடிக்கும்...
கற்பூரமும் கரைந்திடும்..
காற்றோடு கொண்ட காதலால்...

காதலியே..! என் காதல்
கானல் நீராக தெரிகிறதா..?
காதலித்துப்பார்...
கடல் நீரும்..
கானல் நீராக..
கண்களில் தெரியும்...

******************
சிகுவரா
ஜூன் 2004

எழுதியவர் : சிகுவரா (23-May-17, 3:44 pm)
பார்வை : 123

மேலே