புன்னகைத் தென்றல்

ஏதோ ஒரு வசந்தத் தென்றல்
என்னை உரசிச் சென்று
எங்கோ ஒரு தோட்டத்தில்
ஓய்வு கொண்டுவிட்டது !

என்னைத் தொட்டுச் சென்ற
உன் புன்னகைத் தென்றல்
இன்னும் என் நெஞ்சில் உலவுகிறது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-May-17, 7:52 pm)
பார்வை : 124

மேலே