வளம் காப்போம்

தாகம் தீர்த்த கிணறுகள் தவித்து
நிற்கிறது தண்ணீருக்காய்...
பரந்து பரவிய ஏரிகளோ மாறி
நிற்கிறது குடியிருப்பாய்...

அசைந்து ஓடிய ஆறுகளும் இங்கு
அழுது தீர்கிறது வறுமையினால்...
அன்பு அலை பேசிய கடலும் கூட
அழிந்து போகிறது கழிவுகளால்...

எட்டும் தொலைவில் நீரின்றி
ஏங்கி தவிக்கிறது ஒரு பாதி...
வற்றிய நிலையில் நீரிருந்தும்
வாரி இறைக்கிறது மறு பாதி...

சொட்டும் நீரின் வழித்தேடி
சுற்றும் காலம் தூரமில்லை...
வளங்கள் காக்க தவறிவிட்டால்
வாழ இனி வழியுமில்லை...

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (26-May-17, 4:26 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : valam kaappom
பார்வை : 731

மேலே