காக்கி சட்டை
காக்கி சட்டை
நிற்க நேரமில்லை
நிழலும் போதவில்லை
வெயிலோ பனியோ
பகலோ இரவோ
ஓய்வில்லாத உழைப்பு...........
கஷ்ட்டங்கள் ஆயிரம் இருந்தும்
காயங்கள் பல கண்ட போதும்
காக்கிக்குள் கஷ்ட்டத்தையும்
காயங்களை மறைத்து கொண்டும்
காப்பாற்றுவான் கண நேரத்தில்
உயிர்களை இந்த கண்ணால்
கான முடிந்த கடவுள் ........
கதிரவன் வந்த போதும்
சந்திரன் வந்த போதும்
பகல் இரவு என
பாகுபாடில்லாத பணி
கண்டதுண்டா வேறு துறையில்
இவர்களை போல் ........
சிலர் செய்யும் தவறில்
பலர் செய்யும் நல்
பணியை கண்டு கொள்வதில்லை
இந்த பார்வைக்கு படும்
தெய்வங்களின் அறன்பாட்டை
மக்கள் !