அதுவும் எனக்காய்

நீளம் குறையா நீல்வான் எனக்காய்
சாயம் தீரா கருமுகில் எனக்காய்
தென்னை கீற்று தென்றல் எனக்காய்
தீண்டல் கொள்ளும் திங்கள் எனக்காய்
அலசி தவழும் ஆழி எனக்காய்
தழுவி வழியும் மாரி எனக்காய்
அழுகை கேட்கும் நல்கவி எனக்காய்
அகிலம் மறக்கும் மெல்லிசை எனக்காய்
விழுக நினையும் விண்மீன் எனக்காய்
வீழ்ந்தே வாழும் வீழ்அருவி எனக்காய்
வள்ளுவன் உரையின் மெய்வழி எனக்காய்
புல்வெளி உறையும் பனிதுளி எனக்காய்
மலரா மலரின் முன்இதழ் எனக்காய்
மகரந்தம் பொழியும் மலர்தேன் எனக்காய்
இன்னும் கேட்பேன் கோடி எனக்காய்
அவள்அங்கம் கேட்பேன் அதுவும் எனக்காய்

$வினோ..

எழுதியவர் : வினோ.... (27-May-17, 6:40 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : athuvum enakkaai
பார்வை : 112

மேலே