காத்திருந்த காதல்
உதடுகள் உரசிக்கொள்வதல்ல
என் காதல் இரு
மனங்கள் உரசிக்கொள்வது
என் காதல்
நெடும்நேரம் பேசிக்கொள்வதல்ல
என் காதல்
ஒரு சில நொடிகள் பார்வைகளை
வீசிக்கொள்வது என் காதல்...
உனை அடைந்தே தீருவேன் என்ற
வைராக்கியமல்ல என் காதல்
உன்னோடு.... தவறினால் உன் நினைவுகளோடு இறுதிவரை
வாழநினைப்பது என் காதல்...
பூக்களுக்குள் வாசம் செய்யும்
வாசம் போல் என் காதல்
அது உதிர்ந்து காயும் வரை
பூவோடு தான் இருக்கும்...
உன்னிடம் என் காதலை
சொன்ன முதல்நாள் என்
வாழ்வில் இனியநாள்
என் காதலை
நீ ஏற்க மறுத்தாயே
அந்நாள் என் வாழ்வில்
வலிநாள்...
காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
உன் எண்ணமும்
ஒருநாள் மாறும்
என உனக்காகவே
காத்திருக்கும்
இது உன் இதயம்...