வரதட்சணை
வரதட்சணை
~~~~~~~~~~
கார் கூந்தல்
வாரி வகுடெடுத்து
கருவிழியில்
இரண்டில் மை இட்டு
செவ்விதழில்
புன்னகையை மலர விட்டு
பட்டு சீலை கட்டி
பவ்யமாக நிற்கிறாள்
கல்யாண சந்தைக்கு
மாப்பிள்ளையாக விற்பனைக்கு
வந்தவனை வாங்கக்கூடியவள்....
நானும் ஆண்மகன்
என்று வெட்கமே இல்லாமல்
தான் விலை போகிறோம்
என்பதையும் அறியாது.....
பட்டுத்தி பந்தாவாக
கால் மேல் காலிட்டு
சந்தைக்கு வந்த விலை மாடு
நீ என்பதை அறியாது
போனதேனோ வரதட்சணை
கேட்கும் ஆண் மகனே...
🌹💐🌹🌹Samsu🌹💐🌹🌹