ஞாபகங்கள்

நிகழ்காலத்தில் இருந்து
என் வேர்களை
பிடுங்கி
கடந்த காலத்தின்
வீதிகளில் வீசியெறிகிறாய்

பல பரிமாணங்களில்
மனதில் திரையிட்டு
காட்சியோட்டுகிறாய் !

என் கடந்த காலத்தில்
துகள் துகளாய்
பறந்து திரிகிறேன்
நான் !

ஏழு பரிமாணங்களை
மிஞ்சும்
பரிணாம வளர்ச்சி
உன்னுடையது !

வலியோ , சுகமோ
துளி கண்ணீரோ,
சிறு முறுவலோ,
ஏக்கமோ , தயக்கமோ
ஏதோ ஒன்றை ,
பரிதாபமின்றி
பிடுங்கப்பட்ட
என் நிகழ்கால
வேர்களுக்கு
ஆறுதலாய்
அள்ளி தெளிக்கிறாய் !

உன் ஆறுதலை
உணரத் தொடங்கும்
பகுதி நொடிகளில் ,
கடந்த காலத்தில்
வியாபித்து கிடக்கும்
என் துகள்களை
எல்லாம் திரட்டி
பிண்டமாய் செய்து
என் எதிர்காலத்தின்
கடந்த காலத்திற்காய்
அப்படியே ......
விட்டு செல்கிறாய்...... !

என் அருமை நினைவுகளே !
உங்களுக்கு என்
காலங்களின் நன்றிகள் !

எழுதியவர் : அனுசுயா (28-May-17, 6:44 pm)
Tanglish : gnabagangal
பார்வை : 402

மேலே